யுக்ரேன் நெருக்கடி: கீயவ் தெருக்களில் தீவிர சண்டை, துப்பாக்கி சூடு



 


யுக்ரேன் தலைநகர் கீயவ்வில் நுழைவதற்கு ரஷ்யப்படைகள் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஸெலன்ஸ்கி அரசாங்கத்தை போதை மருந்துக்கு அடிமையான கும்பல், நவ நாஜிகள் என்று விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் யுக்ரேன் ராணுவத்தை சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருக்கு தடை விதித்துள்ளன.

ரஷ்யப் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானம் முறியடிப்பு - இந்தியா என்ன செய்தது?

யுக்ரேன் தலைநகர் கீவில் காலையிலேயே தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, யுக்ரேன் ராணுவம் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் தெற்கே உள்ள கருங்கடலில் இருந்து யுக்ரேன் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன