IPL Auction 2022




 மார்க்யூ பிளேயர்ஸ் ஏலம் நடந்துவரும் நிலையில், அதில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வாங்கியுள்ளது. சென்னைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டுப்ளெஸ்ஸியை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.



David Warner

டேவிட் வார்னரை 6.25 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.


உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க


Shreyas Iyer

Shreyas Iyer

ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.



Rabada

வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை 9.25 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி!!!



ராஜஸ்தான் அணிக்கு செல்லும் அஷ்வின்!

Ashwin

Ashwin

ரவிச்சந்திரன் அஷ்வினை 5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.



ஷிகர் தவான்

மெகா ஏலத்தின் முதல் வீரராக ஷிகர் தவானை 8.25 கோடிக்கு விலைக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.





IPL Auction 2022

இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கிறது ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலம். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு புதிய அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகளுடன் இந்த மெகா ஏலம் களைகட்டவிருக்கிறது. பெங்களூரில் இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கூடுதலாக, U19 உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட 10 வீரர்களும் இதில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 அணிகளும் இணைந்து 560 கோடிகளுக்கும் அதிகமான தொகையை செலவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.