ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 யுக்ரேனிய வீரர்கள் உயிரிழப்பு
யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்களிடம் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஓர்லா குரின், லைஸ் டூசெட், மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் ஆகியோ கீயவிலிருந்து, சாரா ரெயின்ஸ்ஃபோர்டு டினிப்ரோவிலிருந்து, ஃபெர்கல் கீன் வீவ் பகுதியிலிருந்து, ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவிலிருந்து மற்றும் மார்க் லோவென் போலந்து எல்லையிலிருந்து செய்திகளை வழங்குகின்றனர்.
யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்ய படையினர் 40 மைல்கள் தொலைவுக்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுக்ரேன் தலைநகர் கீயவில் மீண்டும் ஒருமுறை வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டு வருகிறது. நகருக்கு வெளியே ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
யுக்ரேனின் கார்கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்துள்ளது.
பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்.

Post a Comment
Post a Comment