சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேன் கீத் வார்ன் (Shane Keith Warne; ஷேன் வோர்ன், 13 செப்டம்பர் 1969 – 4 மார்ச் 2022) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகப் பரவலாக அறியப்படுகிறார். 1994-ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார்.[2] அத்துடன் 2004, 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் முன்னணித் துடுப்பாட்ட வீரராக அறிவிக்கப்பட்டார்.2000-ஆம் ஆண்டில் சேன் வார்ன் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் 2013 சூலை இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக இவர் அறிவித்திருந்தார்.இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீரராகவும் பணியாற்றினார்.
சேன் வார்ன் 1992 இல் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். தேர்வு, பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 1,011 இலக்குகளைக் கைப்பற்றினார்.இவரது 708 தேர்வு இலக்குகள் 2007-ஆம் ஆண்டு வரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அதிக இலக்குகளை வீழ்த்திய சாதனையாக இருந்தது.ஒரு பயனுள்ள கீழ்-வரிசை மட்டையாளராக, இவர் 3,154 தேர்வு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[8] பன்னாட்டு அளவில் விளையாடியதுடன், வார்ன் தனது சொந்த மாநிலமான விக்டோரியாவுக்காக உள்நாட்டுப் போட்டிகளிலும், ஆம்ப்சயர் அணிக்காக இங்கிலாந்து உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் 2005 முதல் 2007 வரை மூன்று பருவங்களுக்கு ஆம்ப்சயர் அணித் தலைவராக விளையாடினார். 2003 பெப்ரவரியில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளை சோதனை செய்ததற்காக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஓராண்டுகால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.அத்துடன், பந்தயப் பணயத்தொழிலர்களிடமிருந்து பணம் பெற்று விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள்,பாலியல் தொல்லைஉட்படக் களத்திற்கு வெளியே நடந்த அவதூறுகளால் இவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
2007 சனவரியில் ஆத்திரேலியாவின் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷசுத் தொடரின் வெற்றியின் முடிவில் வார்ன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவருடன் ஆத்திரேலிய அணியின் மேலும் மூன்று முன்னணி வீரர்களான கிளென் மெக்ரா, டேமியன் மார்ட்டின், ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் அதே நேரத்தில் தேர்வுப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர், இது "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று பரவலாக அப்போது அறிவிக்கப்பட்டது.
வார்ன் ஆத்திரேலியாவின் "சிறந்த ஒருநாள் அணியில்" அறிவிக்கப்பட்டார்.[13] பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறிய பின்னர், வார்ன் 2007 ஆம்ப்சயர் அணியில் இறுதிப் பருவப் போட்டிகளில் விளையாடிய பின்னர், முதல் தரப் போட்டிகளில் இருந்து இளைப்பாறினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2008–2011 காலப்பகுதியில் அணித் தலைவராக விளையாடியதோடு, பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment