பனங்காட்டுப்பாலத்தினூடாக குடிநீர் இணைப்பை கொண்டு செல்லும் வேலைத்திட்டம்



 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுப்பாலத்தினூடாக குடிநீர் இணைப்பை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக அரசினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 15 கிலோமீற்றர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பை கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் வேலைகள் நேற்று வைபவ ரீதியாக ஆரம்பமானது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளர் ரி.சிவராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் நீர்வழங்கல் அமைச்சரின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன்  மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் யு.கே.முசாதிக் இயக்குதல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின்பராமரிப்பு பொறியியலாளர் பி.மயூரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர் ந.லோகிஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினூடாக முதற்கட்டமாக பனங்காடு சின்னப்பனப்பனங்காடு மகாசக்திபுரம் உள்ளிட்ட 1200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளவர்.
இதேநேரம் கடந்த பலவருடகாலமாக ஆட்சியில் இருந்த பலரிடமும் குறித்த மக்கள் குடிநீரைப்பெற்றுத்தருமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல்வாதிகளும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி இருந்தனர்.
ஆயினும் தற்போது ஆட்சியில் உள்ள பொதுஜனபெரமுன அரசாங்கத்தின் மூலமே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய அரசுக்கும் அமைச்சருக்கும் அரசியல் தலைவர்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் இணைப்பாளர்களுக்கும் இதனை முன்னின்று செயற்படுத்தும் அரச உயர் அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.