வி.சுகிர்தகுமார் 0777113659
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் யூலிட் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் சமுர்த்தி தொழில் முனைவோருக்கான ஜந்து நாள் பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பமானது.
சமுர்த்தி பயனாளிகளின் தொழில் திறனை அதிகரித்து அதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியில் 66 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஆரம்பமான பயிற்சி நெறி நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்து கொண்டு பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்ப நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் திட்ட முகாமையாளர் க.சத்தியப்பிரியன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக சமுர்த்தி முகாமையாளர்களான என்.வி.எம்.ஹுசைன் மற்றும் எம்.ஏ.ஏ.நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வியாபார ஆரம்ப நிலை , மூலப்பொருட்களை இனங்காணுதல் அவற்றிற்கான செலவை கட்டுப்படுத்தல், உற்பத்தியை ஊக்குவித்தல், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி நெறிகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.
இதேநேரம் பயிற்சி நெறியின் போது தொழில் முயற்சி தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டன.

Post a Comment
Post a Comment