ஆன்மீக எழுச்சி பேரணி



 


வி.சுகிர்தகுமார் 0777113659   

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச இந்து ஆலயங்கள் அறநெறி பாடசாலைகள் மற்றும் இந்து சமய அமைப்புக்களில் ஒழுங்கு படுத்தலில் இந்து சமய பாரம்பரிய மரபு ரீதியான நிகழ்வுகளுடன் தெய்வீக கிராம மாபெரும் ஆன்மீக எழுச்சி பேரணியும் விழாவும் திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்று இருந்தன.

 இத்தெய்வீக கிராம ஆன்மீக எழுச்சி விழாவானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஒழுங்கமைப்பில்
தம்பிலுவில் பொதுச் சந்தை விநாயகர் ஆலயத்தில் இருந்து வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் திருமுன்னிலை அதிதியாக பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் ஆன்மீக அதிதிகளாக ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் பெரிய நீலாவனை ஸ்ரீவிஷ்னு தேவஸ்தான குரு சிவஸ்ரீ பத்மலோஜன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.  

நிகழ்வில்; அதிதிகள் வரவேற்கப்பட்டதன் பின்னர் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு பதாதையும் அதிதிகளால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய கலாசார பாரம்பரிய முறையிலான வீதி ஊர்வலம் தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தது.

தொடர்ந்து ஆலயத்தில் தெய்வீக கிராம நினைவுக்கல் திரைநீக்கம் மற்றும் நந்திக்கொடி ஏற்றுதல் குருபூஜை கோமாதா பூஜை புனித மரநடுகை பிடியரிசி சேகரிப்பு வஸ்திர தானம் வழங்குதல் சூரிய நமஸ்காரம் என்ப இடம்பெற்று இருந்தன. இதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகள் அதிதிகளின் உரைகள் பரிசளிப்பு என்ன இடம்பெற்று இருந்தன.

; சிறப்பு அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இந்து ஆலயங்களின் நிருவாகிகள் அறநெறிப் பாடசாலை நடத்துனர்கள் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.