.
சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று சுகாதாரத்துறையினருக்கு சுமூகமான முறையிலும் நேர்த்தியாகவும் பெற்றோல் வழங்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் மேற்பார்வையோடு இராணுவத்தினரின் பூரண பங்களிப்புடன் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் முழுமையான கண்காணிப்புடன் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு ஒரு மாதகாலத்திற்கு மேலாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் இன்று வழங்கி வைக்கப்பட்ட 6600 லீற்றர் பெற்றோலும் சுகாதாரத்துறைக்கு மாத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த சுமார் ஆயிரம் ஊழியர்கள் இன்று பெற்றோலை பெற்றுக்கொண்டனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 2000 ரூபா வீதமும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 5000 ரூபா வீதமும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
ஆனாலும் இருநாட்களாக காத்திருந்த ஏனைய திணைக்களங்களின்; ஊழியர்கள் உள்ளிட்;ட சில பொதுமக்களுக்கும் பெற்றோல் வழங்கப்படாத நிலையில் அமைதியாக கலைந்து சென்றனர்.;
ஆயினும் கவலையுடன் கலைந்து சென்ற அவர்கள் விரைவில் தமக்கும் பெற்றோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற பெற்றோல் தீர்ந்துபோனதை உறுதிப்படுத்திய நிலையில் வரிசையில் காத்திருந்த பல உத்தியோகத்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிய டோக்கன் வைத்திருந்தமை தொடர்பில் இராணுவம் மற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களால் பரிசோதனை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment