திருமணத்தில் மாதுளம் கன்று அன்பளிப்பு




 ( காரைதீவு சகா)


  காரைதீவில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஒரு முன்மாதிரியான நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

  காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (6) புதன்கிழமை நடைபெற்ற திருமண வைபவத்தின் போது வருகை தந்த அனைவருக்கும் ஒவ்வொரு மாதுளம் கன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 மணமக்களால் இந்த மாதுளம் கன்று வழங்கப்பட்டமை ஒரு முன்மாதிரியான செயற்பாடு என்று வருகை தந்தவர்கள் கூறி வாழ்த்தினார்கள்.

 பொறியியலாளர் நிதர்ஷன் பட்டதாரி பிரம்மியா தம்பதிகளின் திருமணத்தின் போது இந்நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.