வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை திணைக்களத்தின் கீழ்வரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அறுவடை விழா இன்று இடம்பெற்றது.
சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சாமிலி சோமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில்; கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நசார் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை உத்தியோகத்தர் யு.எல்.சம்சுதீன் சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வருகை தந்த அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் பின்னராக சமய வழிபாடுகள் இடம்பெற்றபின் அறுவடை விழா சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 8500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment