கொழும்பு – காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதேவேளை, கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 33 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஆர்ப்பாட்டக் களத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
.jpg)

Post a Comment
Post a Comment