காத்தான்குடி இளைஞர் ஒருவர்,கட்டாரில் அகால மரணம்






காத்தான்குடியைச் சேர்ந்த சகோதர் சுஹாஸ் அவர்கள் நேற்று (05) இரவு கட்டாரில் இடம்பெற்ற சாலை விபத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் தனியார் ஹோட்டல் ஒன்றில் (Bike Delivery  Boy) பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


நேற்று இரவு 11 மணி அளவில் Al Wukkair என்ற பகுதியில் வைத்து கத்தார் நாட்டின் பிரஜை ஒருவரினால் அதிவேகமாக வந்த வாகன விபத்தில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே வபாத்தானார்.


அன்னார் குபா கிரிக்கெட் டீம் சுஜாத் மற்றும் சுஜான் ஆகியோரின் சகோதரர் ஆவார்.



அன்னாரின் மண்ணறை  

வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.