ஜனாதிபதி வீட்டிற்கு போ



 


பாறுக் ஷிஹான்


ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அம்பாறை  - கல்முனை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை  சீனவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.


இந்த போராட்டத்தினை கல்முனை  சேர்ந்த இளம் வர்த்தகர்கள்  இணைந்து கல்முனை நகரின் முக்கிய சந்திகளில் சீடி வெடி கட்டுக்களை வெடிக்க வைத்து ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர்.