தாமதமின்றி அதிகார மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தான் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.jpg)

Post a Comment
Post a Comment