( காரைதீவு சகா)
காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலையில் நேற்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி 4 மாணவிகள் மருத்துவ துறைக்கும், ஒரு மாணவி பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.
மாணவிகளான லோகநாதன் புவித்ரா, சகாதேவராஜா டிவானுஜா, தங்கவடிவேல் டயானு ஆகியோர் 3 ஏ சித்திகளையும், ராஜேஸ்வரன் கம்ஷாயினி இரண்டு ஏ ஒரு பி சித்திகளையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி உள்ளார்கள்.
ரஜிநாதன் துர்க்கா மூன்று ஏ சித்திகள் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார்.


Post a Comment
Post a Comment