பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தலைவிகளுக்கு அரிசி



 


காரைதீவு  சகா)


 அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள காயத்ரி கிராமம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தலைவிகளுக்கு அரிசி வினியோகம்  நடைபெற்றது.

 பிரபல சமூக செயற்பாட்டாளரும் காரைதீவுப் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  தலைமையிலே இந்த விநியோகம்  நேற்று இடம் பெற்றது.

கனடாவில் இருந்து நேரடியாக வருகைதந்த சமூக சேவையாளர் மதி அண்ணரின் நிதியுதவியில் அவரை அதனை வழங்கி வைத்தார்.

 இதன்போது சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி. சகாதேவராஜா, கே புண்ணியநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் கஷ்டப்படும் விதவை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி வினியோகம் வரப்பிரசாதமாக அமைந்தது என்று விநாயகபுரம்சமூக செயற்பாட்டாளர் நந்தபாலு நன்றி தெரிவித்தார்.