காலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது.
2022 .09. 19 .இன்று காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும். பிறகு விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே மிக அணுக்கமான கல்லறை ஜெபம் நடைபெறும். பிறகு நெருக்கமானவர்கள் முன்னிலையில் அடக்கம் நடைபெறும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தபோது நடந்த அரசு மரியாதையுடன் கூறிய இறுதிச் சடங்கு நிகழ்வுக்குப் பிறகு மிகுந்த உணர்ச்சியும், விமர்சையும், சம்பிரதாயங்களும் நிறைந்த இறுதிச் சடங்காக இது இருக்கும்.


Post a Comment
Post a Comment