#IyaasdeenReports.
மருதமுனையின் முதலாவது Chartered Logistician.
மருதமுனைப் பிரதேசத்தின் முதலாவது Chartered Logistician எனும் புகழாரத்தினை முஹம்மட் ஸமீம் ஸஜ்ஜாத் அஹமட் தன்வசம் பெற்றுக்கொண்டார். L
இவர் தற்போது Daraz( Alibaba group) எனும் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் திட்ட மேலாளராக(Project Manager) பணி புரிகிறார்.
CILT(Chartered Institute of Logistics and Transport) எனும் ஐக்கிய இராச்சியத்தினை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச தரம் வாய்ந்த, முன்னணி தொழில் முறை அமைப்பினால் Supply chain, Logistics மற்றும் Transport ஆகிய துறைகளில் பணிபுரிபவர்களுக்காக வழங்கப்படுகின்ற கற்கை நெறிகளை முழுமையாக நிறைவு செய்து, 30ற்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் CILT அமைப்பின் 33 000 அங்கத்தவர்களில் தன்னையும் இணைத்து Chartered Logistician ஆகப் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு சிறந்த செயல்திறன் மிக்கவருங்கான(Best Overall Performance) விருதையும் 06.10.2022ம் திகதி இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சுவீகரித்துக் கொண்டார்.
இவர் , நாட்டின் சிறந்த பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாக வளர்ச்சி கண்டு வரும் Supply chain, Logistics and Transport ஆகிய துறைகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றமை எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்மாதிரி ஆகும்.


Post a Comment
Post a Comment