உலர் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு



 


இலங்கை இந்தோனேஷியா நட்புறவு சங்க அமைப்பினூடாக மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் இந்தோனேஷியா சமூகம் சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டதன் மூலம் நான்கு மதங்களில் ஒவ்வொரு மதங்களையும் சார்ந்த சுமார் நாற்பது குடும்பங்களுக்கு 5000/- ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமையப்பெற்ற ஸ்ரீ கதிர்வேலாயுத கல்யாண மண்டபத்தில் ஆலய தர்மகர்த்தாவும் பிரபல வர்த்தகருமான கனக ரகுநாதன் தலைமையில் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. 


இதன்போது பிரதம அதிதியாக இலங்கை மாலைதீவு நாடுகளுக்கான இந்தோனேஷியா தூதுவர் டெவில் குஷ்டினா ரபிங், கௌரவ அதிதியாக கவுன்சிலர் பொக்கி நூர்டின் மற்றும் சிறப்பு அதிதியாக இலங்கை இந்தோனேஷியா நட்புறவு சங்க தலைவி மர்லினா லக்னா கலந்துகொண்டார்கள். இதனை சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் சிவ ஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா ஏற்பாடு செய்திருந்தார். 


இலங்கை இந்தோனேஷியா  நட்புறவு சங்கத்தின் எவ்வித மத வேறுபாடுகளும் இன்றி நான்கு மத தலைவர்களூடாக நான்கு மதங்களை சேர்ந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் நாற்பது உலர் உணவு பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதேவேளை இந்தோனேஷியா தூதுவரிற்கும், நட்புறவு சங்கத்தினருக்கும் சர்வதேச இந்துமத பீடம் நன்றிகளை தெரிவித்துள்ளது. மேலும் கதிரேசன் கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவல சபையினரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.