கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா



 


(வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை  ஆதார வைத்தியசாலையின் ஒளி 
விழா நிகழ்வானது  நேற்று வைத்திய 
அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் 
தலைமையில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் 
மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந் நிகழ்விற்கு ஓய்வுபெற்ற 
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய 
அதிகாரி டாக்டர் கிறீஸ் நவரெட்ணராஜா பிரதம 
அதிதியாகவும்,
கல்முனை எய்ம் தேவாலய அருட்தந்தை. ரமேஷ்  சிறப்பு விருந்தினராகவும்  கலந்து சிறப்பித்தனர். 

இதன் போது 
சிறுவர்களுக்கான நிகழ்வுகளில் நத்தார் தாத்தா கலந்து 
சிறப்பித்தார். இங்கு வைத்தியசாலை வைத்திய 
நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய 
உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப 
உறுப்பினர்களும் பங்குபற்றினர்.
 அத்துடன் ஒவ்வொரு
விடுதிகளுக்கும் நத்தார் தாத்தா சென்று சிறுவர்களையும் 
நோயாளர்களை மகிழ்வூட்டியதுடன் பரிசுப் 
பொருட்களையும் வழங்கினார்