விழிப்புணர்வு நிகழ்ச்சி




இன்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாலையர்கட்டு கிராம மக்களுக்கு காணப்படும்   போதைபாவனை,களவு,சிறுவயது திருமணம், சட்ட விரோதமாக செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பட்/மாலையர்கட்டு த.க.பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை பாடசாலை அதிபர் ஒழுங்கு செய்திருந்தார்.இதில். நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,உளவள உத்தியோகத்தர், சிறுவர் அதிகார சபை உத்தியோகத்தர், சிறைச்சாலை ஐக்கிய மைய அலுவலகர், கலந்து கொண்டனர்.