சவளக்கடை வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலத்தின் முப்பெரு விழா பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வியாழக்கிழமை(12) இடம்பெற்ற இந்நிகழ்வில் க.பொ.த. உயர் தர தின விழா, 2020, 2021ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு, மருதம் மலர் வெளியீடு என்பன இடம்பெற்றன.
வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஏ.எம்.முனாஸிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர் அலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைறூஸ்கான், அல் கரீம் பெளண்டேசன் தலைவரும், சமூக சேவையாளருமான சீ.எம்.ஹலீம், நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், உறுப்பினர்களான ஏ.பி.சுபைதீன், எம்.பி.எம்.நவாஸ், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.எம்.ஸம்ஸம், உதவி அதிபர் சீ.எம்.நஜீப், ஏ.எம்.ஸாலித்தீன். ஆசிரியர் டீ.எம்.மெளசூன் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கபொ.த.உயர் தர தின விழா இடம்பெற்றதுடன், கடந்த வருடங்களில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மருதம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
அத்துடன் முன்னாள் ஆசிரியர் டீ.எம்.மெளசூன் இலங்கையின் தேசிய மரமான நாகமரம் ஒன்றை பாடசாலை வளாகத்தில் நடுவதற்காக பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
.jpeg)

Post a Comment
Post a Comment