நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்!



 .


சுகிர்தகுமார் 0777113659

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றிலும் இன்று அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிராக இன்று வங்கி நடவடிக்கையில் இருந்து விடுபட்டு வங்கிகளை மூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரச வங்கிகள் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்ததுடன் சில தனியார் வங்கிகள் இன்று நண்பகல் ஒரு மணிக்கு பின்னராக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளானதுடன் பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது.
அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள வரி அறவீட்டு முறையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே வங்கி ஊழியர்கள் கடமையில் இருந்து இன்று விலகிக்கொண்டுள்ளனர்.
இதேநேரம் அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையிலான அமைதியான பேரணி ஒன்றினை அன்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.