"சமூக பொருளாதார சமத்துவத்தை வலுப்படுத்துவோம் "


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 

சமூக பொருளாதார சமத்துவத்தை வலுப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஏற்பாடு செய்த அனைத்துலக பெண்கள் தின சிறப்பு நிகழ்வுகள் தம்பட்டை சுவாட் பயிற்சி வெளியக அரங்கில்  பெருமளவான பெண்களின் பங்களிப்புடன் இன்று இடம்பெற்றது.
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் அங்கத்தவர்களின் முற்றுமுழுதான ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவியுமான கலாநிதி அனுசியா சேனாதிராஜா மற்றும் அம்பாரை மாவட்ட சிறுவர் மகளிர் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ஜி.டயானி கமகே அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி குமுது குமாரி உள்ளிட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர்கள் மகளிர் அமைப்புக்களின் பல்வேறுமட்ட தலைவிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
; தீபமேற்றும் நிகழ்வுடனும் பெண்களின் சத்தியபிரமாண நிகழ்வோடும் ஆரம்பமான  மகளிர் தின நிகழ்வுகளில் பல்வேறு சிறப்புரைகள் இடம்பெற்றன.
சிறப்பம்சமாக பெண்களின் ஏழுச்சிப்பாடல்கள் பாடப்பட்டதுடன் வீட்டிற்காக உழைப்பவர்கள் பெண்களா? அல்லது ஆண்களா? எனும் விவாத அரங்கும் பெண்களும் அரசியலும், பெண்களின் பாதுகாப்பும் சட்டமும், பெண்களின் பொருளாதாரத்தில் சுயதொழிலின் முக்கியத்துவம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய வட்;டமேசை மாநாடும் இடம்பெற்றது.
இதேநேரம் நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளினால் பெண்களின் உரிமைகள் அவர்கள் பாதிக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கள் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
இதன்போது சில பெண்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர்களால் பதில் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் பெண்கள் அனைவரும் இணைந்து பாடல்கள் பாடியதுடன் அவர்களுடன் இணைந்து பெண் பொலிஸ் அதிகாரிகளும் நடனம் ஆடி மகிழ்ச்சிப்படுத்தியமை சிறப்பம்சமாக அமைந்தது.