பதவியேற்பு!




( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அருட் சகோ ரெஜினோல்ட் இன்று (19) புதன்கிழமை காலை கடமையேற்ற வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதுவரை சிறப்பாக கடமையாற்றிய அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக  இடமாற்றம் பெற்று நாளை மறுதினம் (21) வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்.

கடமை ஏற்கும் வைபவத்தை
பாடசாலை பழைய மாணவர் சங்கம்  , பாடசாலை அபிவிருத்தி  சங்கம், பெற்றோர் சங்கம் ,  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 இன்று காலை   ஊர்வலமாக கல்முனை கார்மேல் பாற்றிமா கல்லூரி வீதி ஆரம்பத்தில் இருந்து பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்புடன்  அதிபரை அதிதிகள் சகிதம்    அழைத்து சென்றனர்.

இதன் போது வீதியின் இரு மருங்கிலும் சாரணிய மாணவர்கள் ,சென் ஜொன்ஸ் அம்புலன்ஸ் சங்க மாணவர்கள் ,சிரேஸ்ட மாணவ தலைவர்கள் ஆகியோரால்  புதிய அதிபர் வரவேற்கப்பட்டார்.

கல்லூரியில் அதிபர் அலுவலகத்தில் கடமையேற்பு வைபவம் சர்வமததலைவர்களின் ஆசியோடு  இடம் பெற்றது.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம் மற்றும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து முன்னிலையில் புதிய அதிபர் அருட் சகோ ரெஜினோல்ட், முன்னாள் அதிபர் அருட் சகோ சந்தியாகு செபமாலையிடமிருந்து கடமையை பொறுப்பேற்றார். பின்னர் அவர்
சம்பவத் திரட்டு புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

அதன் பின்னர் தேசிய கொடி மற்றும்  பாடசாலை கொடி  ஏற்றப்பட்டு கீதங்கள் இசைக்கப்பட்டன.தொடர்ந்து   மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதில் வரவேற்புரை, ஆசியுரைகள் அதிதிகளின் உரைகள் ,பாடல் ,நடனம், என  இறுதியாக நன்றி உரைகள் இடம்பெற்றன.

மன்னாரிலிருந்து பலபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.