அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற கத்தமுல் குர்ஆன் நிகழ்வு



 


அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயல் மீள் நிருமாண கட்டிடப் பணிகளுக்கான அடிக்கற்கள் நேற்றைய தினம்  நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிவாயலில் பணி புரிந்து மறைந்தோர்களுக்கான கத்தமுல் குரஆன் நிகழ்வும் துஆப் பிரார்த்தனையும் பட்டினப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி  அல்ஹாஜ் அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கத்தமுல் குர்ஆன் நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவிமார்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள், பரோபகாரிகள்,பள்ளிவாயல் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.