(FilePhoto)
கடந்த காலங்களில் பொது விடுமுறை தினங்களில் கடமை புரிந்து வந்த தாதிய உத்தியோகத்தர்களுக்கான பொது விடுமுறை தின(PH day) கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் மேற்பட்டி விடுமுறை தினங்கள் கடமைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தாதியர்கள் நோயாளிகளின் நன்மை கருதி கொடுப்பனவுகள் பெறாத நிலையில் கடமை புரிந்து வந்தனர் இத சம்பந்தமாக பல்வேறு தடவைகள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குடன் கலந்துரையாடியும் எவ்விதமான நடவடிக்கைகளும் தீர்மானங்களும் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படாமையினாலும்,சீருடை கொடுப்பணவு வழங்கள்படாமை போன்ற பிரச்சினைகள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளதாத கூறினார்.
அரச பொது விடுமுறை தினங்களினை(public holiday) விடுமுறையாக பெற்று ஏனைய அரச உத்தியோகத்தர்கள் போன்று கடமைக்கு சுகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். இதன் காரணமாக மாகாண சபைக்குட்பட்ட அரச வைத்திய சாலைகளில் கடமை புரிகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் மேற்படி தினங்களில் வைத்திய சாலைகளில் கடமைக்கு சமுகமளிக்கமாட்டார்கள் என்றும் இதனால் சிகிச்சைக்காக வரும் மற்றும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உரிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேற்படி கொடுப்பணவுகள் ஏனைய மாகாண, மத்திய அரசு வைத்தியசாலைகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.


Post a Comment
Post a Comment