ஏர் பூட்டு விழா







 வி.சுகிர்தகுமார் 0777113659  

 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று விபுலானந்தா இந்து இளைஞர் மன்றத்திற்கு சொந்தமான சாகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாய நெற் செய்கை காணியில் ஏர் பூட்டு விழா நேற்று (08)சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றம் மற்றும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபே விக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் காரைதீவு பிரதேச செயலாளர் க.ஜெகராஜன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜா அக்கரைப்பற்று கிழக்கு விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் சம்சுடீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாகாமம் வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் ஏர் பூட்டு விழாவினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர் அவரது வருகையினை சிறப்பிக்கும் வகையிலாக மரக்கன்றொன்றினையும் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கட்டடத்தில் இடம்பெற்ற விசேட ஒன்று கூடலில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளருக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் இந்து இளைஞர் மன்றத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பின்னராக உரையாற்றிய மாவட்ட செயலாளர் சிறப்பாக செயற்பட்டு பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் இல்ல நிருவாகத்தை பாராட்டினார். அத்தோடு மாணவர்களும் கல்வியில் உயர்ந்து நல்ல பதவிகளை பெறுவதோடு இல்லத்தை என்றும் மறக்காதவர்களாக இருக்க வேண்;டும் என கேட்டுக்கொண்டார்.
இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு பொருட்களையும் ஆசிர்வாதத்திகைளும் மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி சென்றார்.