சூட்டிங்க் சம்பவத்தில் #தந்தையும், #மகளும் பலி!



 


நேற்றிரவு #மித்தெனிய பொலிஸ் பிரிவில், கடவத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.


இந்த துப்பாக்கிச் சூட்டில் 39 வயது தந்தையும், 06 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கல்பொத்த பகுதியை சேர்ந்த #அருணா விதானகம என்கிற #கஜ்ஜா என்பவரே சம்பவம் நடந்த நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும், இவரது மகனும் மகளும் காயமடைந்துள்ள நிலையில் மகள் தங்காலே வைத்தியசாலையிலும் மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எனினும் சிகிச்சை பலனின்றி 6 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.


இந்த துப்பாக்கி சூடுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக போலீஸ் சந்தேகிக்கின்றனர்.


சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.


19.02.2025

@top fans Almashoora Latest News