வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புலமைபரிசில் பரீட்சையில் முதல் நிலை பெற்றிருக்கும் அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 18 மாணவர்களையும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் கௌரவிக்கும் பெருவிழா பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (23) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கே.துளசிநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பளார்; ஆர்.உதயகுமார் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் ஓய்வு நிலை அதிபர் பி.தணிகாசலம் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பதில் அதிபர் ஜயந்தன் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களான ஜெயக்குமார் சுரேஸ் மற்றும் சுதர்சன் பாடசாலை அபிவிருத்தி குழு முன்னாள் செயலாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களையும் அதிதிகளையும் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இதன் பின்னராக பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிதிகள் உரையாற்றியதுடன் பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்து வரும் அதிபர் சேவையினை பாராட்டி பேசினர்.
தொடர்ந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 18 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களும் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேநேரம் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலையினை சிறப்பாக முன்னெடுத்துவரும் அதிபர் புலமை பரிசில் கற்பித்த ஆசிரியர் மூவரது சேவையினை பாராட்டி பாடசாலை கல்வி சமூகமும் பெற்றோர்கள் கௌரவித்ததுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

Post a Comment
Post a Comment