சஞ்சிகை வெளியீடும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவும்



 


.சுகிர்தகுமார்           


 அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ பெரியதம்பிரான் அறநெறி பாடசாலையின் அறநெறி காத்து அன்போடு வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆரம் சஞ்சிகை வெளியீடும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவும் நேற்று (27) மாலை நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலையின் அதிபர் யோ.கனகநாயகம் தலைமையில் பொறுப்பாசிரியர் அ.தமிழ்ப்பிரியா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிரசாத் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பு அதிபர்களான பி.தணிகாசலம் தட்சணாமூர்த்தி மு.குழந்தைவடிவேல் நடன ஆசிரியை மாதுரி பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அறநெறிக்கல்வியினை ஊக்குவிக்கும் வகையிலான போட்டி கோலம் போடுதல் நிறைகுடம் வைத்தல் குருத்தோலை பின்னுதல் சமய அறிவு வினாவிடை போட்டி நிகழ்வுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நடாத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் அறநெறி பரீட்சை மற்றும் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.