வி.சுகிர்தகுமார்
2025 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இன்று (24)பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமானது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர்.சுபாகர் தலைமையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
179 உத்தியோகத்தர்கள் இன்று தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இம்முறை வழமைக்கு மாறாக தபால்மூல வாக்களிப்பில் கலந்து கொள்ள உத்தியோகத்தர்கள் அதிக ஆர்வம் காட்டியதையும் காணமுடிந்தது.
மூன்று கட்சிகள் மற்றும் ஒரு சுயேற்சைக்குழு போட்டியிடும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்காக 16 பேர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment