.சுகிர்தகுமார்
முன்னாள் ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் மலசலகூடம் செல்வதற்கு மட்டுமே வான் ஊர்த்திகளை பயன்படுத்தவில்லை. ஏனைய அனைத்து நிகழ்வுகளுக்கும் வான் ஊர்த்திகளை பயன்படுத்தி மக்கள் நிதியை வீண்விரயம் செய்தனர் என அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பீ வட்டார கிளை தேர்தல் காரியாலயத்தை இன்று (27) திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஆலைடியவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பீ வட்டார கிளை வேட்பாளர் எம்.தங்கேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்ற காரியாலய திறப்பு விழாவில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் வேட்பாளர் டி.பேரின்பவாணி மற்றும்; தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் இணைந்து கட்சி காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது கட்சியின் இணைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தி குறுச்செய்தி ஊடாக சொல்வதற்காக மில்லியன் கணக்கான நிதியை செலவிட்டனர். இது அவரர்களது சொந்த நிதியல்ல. மக்களது வரிப்பணத்தில் சேர்க்கப்பட்ட நிதி;. மக்களது நிதியை வெலவழித்தே மக்களை மகிழ்ச்சிப்படுத்தினர். இதனை நாம் மாற்றி அமைத்தோம் . இதுபோன்ற வீண்விரயங்களை தவிர்த்து அந்த நிதியை மக்களது நலனுக்காக பயன்படுத்தி வருகின்றோம் என்றார்.
நாட்டை நேசிக்கும் நாம் நாட்டினை சிறப்பாக வழிநடத்திவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதுடன் ஆளுமைமிக்க நேர்மையானவர்களை கொண்ட பிரதேச சபையினை உருவாக்கி அதனூடாக உண்மையான அபிவிருத்தியை அடைய அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் என கட்சியின் இணைப்பாளர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூன்று கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு ஒன்று அடங்கலாக நான்கு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
10 வட்டாரங்களில் இருந்து வட்டார ரீதியாக 10 உறுப்பினர்களும் மேலதிக ஆசனங்கள் 06 அடங்கலாக 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 76 பேர் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment