அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், நேற்று இரவு திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் காரில் பயணித்தவர்களின் மீது, சாலையில் சடுதியாக குறுக்கறுத்த மாடு குத்தியதனால், தைக்கா நகரைச் சேர்ந்த சைனாஸ் என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த காரில் குறித்த காரை செலுத்திய தந்தையும், இந்தக் குழந்தையும் தாயும் பணித்துள்ளனர். இந்த குழந்தையின் தாய் குறித்த 9 வயது குழந்தையை தனது தாய் மடியில் வைத்துச் சென்றுள்ளார்.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், சடுதியாக குறுக்கறுத்த மாடு காரில் கண்ணாடியில் மோதியுள்ளது. காரின் கண்ணாடி உடைந்து பிள்ளையில் தலையில் ஏறியிருக்கின்றது. கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இந்த ஒன்பது மாத குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது இதேவேளையில் குறித்த வாகனத்தைச் செலுத்திய குழந்தையின் தந்தையும் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment