வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பில் அதிபர் ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தனது கண்டணத்தை தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
க.பொ.தராதர மற்றும் உயர்தர மாணவ்hகளின் கற்றை பெறுபேறுகளிலும் தாக்கத்தை செலுத்தும் என குறிப்பிட்டார்.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பொலிசார் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இல்லாது விடின் எதிர்காலத்தில் இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் கூறிய அவர் சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் கடிதம் மூலம் அறிவித்து தக்க நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment
Post a Comment