வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு வீடமைப்பிற்காக 10 இலட்சம் வழங்கப்படவுள்ளது.
'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 102 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகள் நிhமாணிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட தொழிநுட்ப முகாமையாளர் ஏ.ஜி.எம்.பாஹிம்,மற்றும் அதிகாரிகள்;, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியினை வீழ்ச்சியடைய செய்துவிடலாம் என எல்லா கட்சிகளும் பகல் கனவு காணுகின்றன. ஜுலை மாதத்தில் வீழ்ச்சியடைய செய்து விடலாம். ஒக்டோபர் மாதத்தில் வீழ்ச்சியடைய செய்து விடலாம். மூன்று மாதங்களில் வீழ்ச்சியடைய செய்து விடலாம் என நினைக்கின்றனர். இதற்காக இறுதிக்கட்டத்தில் முதலாளித்துவாதிகள் எல்லோரும் ஒன்று சேர்வதுபோல இப்போது சேர்ந்துள்ளனர். இதனை மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக ரீதியில் மக்கள் ஆதரவோடு நீண்ட தூரம் பயணிக்கும் என்றார்.
ஊழலற்ற ஆட்சி நாட்டிலே நடைபெறுவதால் திறைசேரியிலே பணம் உள்ளது. இதனை பயன்படுத்தி இன்னும் பல வீடுகளை மக்களுக்கு அமைத்துக் கொடுப்போம்.
.jpg)

Post a Comment
Post a Comment