பொரளையில் இன்று,துப்பாக்கிச் சூடு




 பொரளையில் இன்று (24) மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.