இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்தின் தலைமையகத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். மொசாத் தலைமையகம் எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த போர் அடுத்தகட்ட தீவிரத்தை நோக்கி நகர்ந்ததற்காம அறிகுறியாக இந்த தாக்குதல் அறிவிக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அமெரிக்காவின் மத்திய-கட்டுப்பாட்டகம் central command -Centcom முழுவீச்சிலான தாக்குதலை ஈரான் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நேற்று நடந்த ஜி-7 பணக்கார நாடுகளின் கூட்டத்தில் இசுரேலுக்கு ஆதரவை ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போரில் இந்த நாடுகளின் பங்களிப்பை அல்லது பங்கேற்பை அறிவித்திருக்கிறது. ஆக, நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ரஷ்யாவை நோக்கிய போரை நேட்டோ நாடுகள் யுக்ரேன் வழியாக தொடங்கியது. ரஷ்யாவும், யுக்ரேனும் செய்துகொண்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்து, யுக்ரேனில் அமைதி வேண்டுமென்ற அதிபரை ஆட்சியை விட்டு கீழிறக்கி ஜெலன்ஸ்கி எனும் நாஜி கோமாளியை கொண்டு போரை தொடங்கினார்கள். ஹமாஸுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறிக்க ஹமாஸ் தலைவரை கொலை செய்தார்கள். ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரெல்லாவோடு பேச்சுவார்த்தை பேசி போர் நிறுத்தம் என சொல்லி பின்னர் அவரை கொன்றார்கள். ஈரானின் அதிபரின் மரணமும் சந்தேகத்திற்குரிய வகையானது. ஈரானின் ஆதரவு சக்திகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, லெபனான், சிரியா ஆகியவற்றை அழித்தொழித்துவிட்டு ஈரானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். ஈரானுக்கு துணையாக யேமனின் ஹவுத்தி போராளிகள் மட்டுமே களத்தில் நிற்கின்றனர். இந்த நாசத்தை செய்ய நேதன்யகு எனும் பாஸிஸ்டை அதிகாரத்தில் வைத்திருக்கிறார்கள். ஜெலன்ஸ்கி, நெதன்யகு ஆகிய இருவருக்கும் மேற்குலகின் ஆதரவு இல்லையெனில், அடுத்தநாளே சிறை செல்லக்கூடியவர்கள். ஆசியாவின் வளங்கள் மட்டுமல்லாமல், உற்பத்தி கட்டமைப்புகளை, பொருளாதார வளர்ச்சியை நெருக்கடிக்குள் தள்ளினால் மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் உயிர்வாழ இயலும். ஏனெனில் போரின் வழியாக வணிகம் செய்யும் கட்டமைப்பினை கொண்டவை அமெரிக்காவும், இங்கிலாந்தும். ஆனால் அமைதி நிலவினால் மட்டுமே வணிகம் செய்யும் வகைப்பட்ட கட்டமைப்பு சீனாவினுடையது. ஆயுத உற்பத்தி கட்டமைப்பு மேற்குலகிற்கு என்றால், அன்றாட பயன்பாட்டு உற்பத்தி முதல் அமைதிக்காலத்திற்கான அனைத்தையும் உற்பத்தி செய்பவை சீன நிறுவனங்கள். இந்த சூழலில் சிக்கிவிடாமல் உலக அளவில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு இந்தியா போன்ற பெரிய பொருளாதார நாடுகளுக்குண்டு. மாட்டுச்சாணியை தலையில் வைத்திருக்கும் கும்பலிடம் நம்மால் என்ன எதிர்பார்க்க இயலும்? அதிகம் அரசியல் பேசுவோம். இது போர்க்காலம். வீடியோ: மொசாத்தின் தலைமையகத்தில் ஒன்று
Post a Comment
Post a Comment