தூய்மையான நகரம்' இந்தூரில் மாசடைந்த தண்ணீரால் பலர் உயிரிழப்பு



 


    • சமீர் கான்
    • பதவி,பிபிசி இந்திக்காக

நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகிவரும் வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விநியோகக் குழாயில் கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது.

இந்தோர் நகரின் இந்தப் பகுதியில் குடிநீர் மாசு காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாநில அரசு அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா 8 முதல் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று இன்று கூறினார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

மாசுபட்ட நீரினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பல நபர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.