தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நகர அபிவிருத்தி அமைச்சின் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கப்பட்ட கிராமமான அலிக்கம்பை பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் இன்று(31) திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் புனித சபேரியர் தேவாலயத்தின் அருட்தந்தையர் ஆன்றோய் மற்றும் உதவிப்பங்குத்தந்தை அஜந்தன் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் நிதர்சன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோத் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அருட்தந்தையர்களின் பிரார்த்தனைகளோடு மூன்று வீடுகளும் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 15 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் அளிக்கம்பை மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதிக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அம்மக்களும் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசனும் நன்றி தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment