சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் ஆராதனை மண்டப திறப்பு விழா !
நூருல் ஹுதா உமர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகக் கொண்டுள்ள சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட ஆராதனை மண்டபத்தின் திறப்பு விழாவும் வருடாந்த இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்வும் இன்று (15) பாடசாலை அதிபர் எம்.எஸ். ஆரிப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாணவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராதனை மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேலும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி அஸ்மா அப்துல் மலிக், மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். அஸ்மி, ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது ரமலானின் ஆன்மீக முக்கியத்துவம், கல்வியின் அவசியம் மற்றும் சமூக ஒற்றுமையின் மதிப்பு குறித்து மார்க்க சொற்பொழிவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளை செயலாளர் மௌலவி நப்ராஸ் ஹனிபா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் நோன்பு திறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பின்தங்கிய சூழ்நிலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆன்மீகமும் ஒழுக்கமும் சார்ந்த சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த ஆராதனை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மாணவர்களின் கல்வி மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்கு ஆதரவாக சமூகத்தின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற


Post a Comment
Post a Comment