'பப் எல் மண்டேப்' நீரிணையை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம்



 


அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. 


இந்நிலையில் உலக சந்தையில் பிரதானமாக எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.


இதனால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. 


இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு பப் அல் - மண்டெப் நீரிணையை மூடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.


இதன் காரணமாக உலக கடல்வழி எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் 30 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இந்த வழியானது, ஆசியா - ஐரோப்பா வர்த்தகத்துக்கு முக்கியமானதாகும். 


அதுமட்டுமின்றி ஈரான் மற்றும் ஓமானுக்கிடையில் 33 கிலோமீட்டர் அகலத்தில் இந்த நீரிணை அமைந்துள்ளது. 


மேற்கூறிய இரண்டு நீரிணைகளும் மூடப்பட்டால் ஆசியா-ஐரோப்பா வர்த்தகக் கப்பல்கள் தென் ஆபிரிக்காவின் கேப் ஆப் குட் ஹோப் வழியாகச் செல்ல 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகப் பயணிக்க நேரிடும். 


இதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்து மசகு எண்ணெய் விலை மேலும் உயரும்.