1991-ஆம் ஆண்டு, சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி 15 அன்று, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஓர் உரையை நிகழ்த்தினார். அந்த உரையை நினைத்து அவர் தனது வாழ்நாள் இறுதி வரை வருத்தப்பட்டிருக்கலாம்.
அந்த வளைகுடாப் போரின் அதிநவீன ஆயுதமாக அறிமுகமான 'பேட்ரியாட்' இடைமறிப்பு ஏவுகணைகளைத் தயாரித்த மாசசூசெட்ஸில் உள்ள தொழிற்சாலையில் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.
தாக்க வரும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் இந்த பேட்ரியாட்கள், இன்றும் யுக்ரேனிலும் இரானுடனான போரிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
1991-ஆம் ஆண்டு, சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி 15 அன்று, முதல் அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரையை நினைத்து அவர் தனது வாழ்நாள் இறுதி வரை வருத்தப்பட்டிருக்கலாம்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,1991ஆம் ஆண்டு குவைத்திலிருந்து இராக்கிய துருப்புகளை விரட்டியடிக்க நடந்த ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்க ராணுவ வாகனங்கள்
குவைத்தில் இருந்து இராக் படைகளை வெளியேற்றுவதற்கான பெரிய ராணுவ நடவடிக்கையான 'டெசர்ட் ஸ்டார்ம்' நடந்து கொண்டிருந்த போது புஷ் அந்த தொழிற்சாலைக்குச் சென்றார்.
விளம்பரம்
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கூட்டு வான்படைகள் இராக் படைகளையும் அதன் நகரங்களையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தன.
தரைவழிப் போர் தொடங்க ஒன்பது நாட்களே இருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான நட்பு நாட்டு வீரர்கள் இராக் மற்றும் குவைத் எல்லைகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது நான் பாக்தாத்தில் அந்தப் போர் குறித்து செய்தி சேகரிப்பதில் மும்முரமாக இருந்தேன்.
அதாவது அமெரிக்க அதிகாரத்தை எதிர்ப்பது, போரை விரிவுபடுத்துவது, பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவது மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கவனமாக உருவாக்கப்பட்ட உறவுகளைச் சிதைப்பது போன்ற இரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும்.
வளைகுடா நாடுகள் நிலை என்ன?
வளைகுடா நாடுகள் இந்தப் போர் நடப்பதைத் தடுக்கவே முயன்றன. இப்போது இரான் அவர்களை இலக்குகளாக மாற்றியுள்ளது. சீனா பின்னணியில் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவுடனான கூட்டணி மற்றும் இஸ்ரேலுடனான சுமுக உறவு ஆகியவற்றின் மதிப்பை அந்த நாடுகள் மீண்டும் பரிசீலிக்கக்கூடும்.
குறிப்பாக டிரம்ப் வெற்றியை அறிவித்துவிட்டு, அந்த குழப்பங்களைச் சரிசெய்யும் பொறுப்பை செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளிடம் விட்டுச் சென்றால் இது நடக்கலாம்.
இனி எப்போதும் முடிவில்லாத போர்கள் இருக்காது என்று அமெரிக்கர்களுக்கு வாக்குறுதி அளித்த டிரம்ப், தான் சீனாவை எதிர்கொள்ளப் பயன்படுத்த நினைத்த படைகளை மத்திய கிழக்கிலேயே வைத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படலாம்.
மறுபுறம், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மத்திய கிழக்கை மாற்றி அமைக்கவும், சவால் செய்ய முடியாத ராணுவ வல்லமை கொண்ட நாடாகத் தங்கள் நிலையை வலுப்படுத்தவும் தங்களுக்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த வாய்ப்பாக இதைக் கருதுகிறார்கள்.
இரானின் லெபனான் கூட்டாளியான ஹெஸ்பொலாவை ஒட்டுமொத்தமாக அழிக்க அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
இதை அவர்கள் 1990-களிலிருந்து முயன்று தோற்றுப் போயுள்ளனர். உலகத்தின் கவனம் இரானின் மீது இருக்கும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முறையாகத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுத்து வருகிறது.
போர்களைத் தொடங்குவது அவற்றை முடிப்பதை விட மிகவும் எளிதானது என்பதை டிரம்ப் உணரக்கூடும். நீங்கள் எங்குச் செல்கிறீர்கள் என்பது சரியாகத் தெரியாதபோது, எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அறிவது கடினம்.
உலகிலேயே வலிமைமிக்க நாடான அமெரிக்கா, ஒரு முறையான அரசியல் உத்தி இல்லாமலும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் ஒரு அதிபரின் கீழும் போருக்குச் சென்றுள்ள நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வருவது இன்னும் கடினமானதாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூ
இரானின் இஸ்லாமியக் குடியரசை அழிப்பது என்ற தனது வாழ்நாள் கனவை அவரால் நனவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
போரின் இரண்டாவது நாளில் அவர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் 'உதவியுடன்' இஸ்ரேலால் "நாற்பது ஆண்டுகளாக நான் எதற்காக ஏங்கினேனோ அதைச் செய்ய முடிந்தது. அந்தப் பயங்கரவாத ஆட்சியைத் தகர்ப்பது. இதைத்தான் நான் வாக்குறுதி அளித்தேன், இதைத்தான் நாங்கள் செய்வோம்" என்று அவர் கூறினார்.
டிரம்பைப் போலவே, அவரும் இரானில் மக்கள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
இரான் வன்முறை மற்றும் குழப்பத்தில் ஆழ்வது குறித்து இஸ்ரேல் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்கு ஒரு நல்ல முடிவாகக் கூட இருக்கலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முந்தைய அதிபர்கள் செய்யாதது
இரானிய ஆட்சியை அகற்றுவது உலகை பாதுகாப்பானதாக மாற்றும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
அவர்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். அது ஒரு விரும்பத்தகாத, வன்முறை ஆட்சிமுறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் ஒடுக்குமுறை, ஊழல் மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிய ஆயிரக்கணக்கான இரானியர்களை அந்த ஆட்சி கொன்றது.
அது அணு குண்டாக மாற்றக்கூடிய அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டியது.
ஆனால், 2003-ஆம் ஆண்டு இராக் மீதான படையெடுப்புடன் தொடங்கியதைப் போன்ற ஒரு பேரழிவை இந்தப் போரின் விளைவுகள் ஏற்படுத்தினால், அவர்கள் சொல்வது தவறாகிவிடும்.
இராக் சர்வாதிகாரி உசேனை அகற்றிய பிறகு, அந்த ஆட்சிக்கு மாற்றாகச் செயல்படக்கூடிய ஒரு முறையான திட்டம் இல்லாதது, பல ஆண்டுகால மதக் கலவரங்களுக்கும், உள்நாட்டுப் போருக்கும், பல்லாயிரக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது.
மேலும் அங்கு ஏற்பட்ட அதிகார வெற்றிடம், ஐ.எஸ் குழு வளரக் காரணமாக அமைந்தது. அவர்களை போன்றவர்கள் இப்போது இந்தப் புதிய நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகளைத் தேடுவார்கள்.
நெதன்யாகு இரானுடனான போர் குறித்து பலமுறை யோசித்திருந்தாலும், அதற்குப் போருக்குத் தயாராக இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரின் உதவி இஸ்ரேலுக்குத் தேவை என்பதை எப்போதும் உணர்ந்திருந்தார்.
இறுதியாக, இப்போது அப்படி ஒருவர் கிடைத்துள்ளார், அவர்தான் அதிபர் டிரம்ப்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நெதன்யாகு பிரதமராக இருந்தபோது அவர் எதிர்கொண்ட முதல் அதிபரான பில் கிளிண்டன் உட்பட முந்தைய அதிபர்கள் யாரும் இதைச் செய்யவில்லை.
இரான் உண்மையிலேயே அணு ஆயுதத்தைப் பெற முயற்சித்தால் மட்டுமே போரை ஒரு இறுதி வாய்ப்பாக வைத்துக் கொண்டு, அதுவரை இரானைக் கட்டுப்படுத்தி வைப்பதிலேயே அவர்கள் திருப்தி அடைந்தனர்.
மேலும் அவர்கள் பெரும்பாலும் இதில் நடவடிக்கை எடுக்காததற்கு இப்போது நடப்பவையே காரணம்.
அதாவது அமெரிக்க அதிகாரத்தை எதிர்ப்பது, போரை விரிவுபடுத்துவது, பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவது மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கவனமாக உருவாக்கப்பட்ட உறவுகளைச் சிதைப்பது போன்ற இரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும்.
இரான்

Post a Comment
Post a Comment