அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் உயர்வு



 சந்தையில் பருப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எரிபொருள் விலை அதிகரிப்பை காரணங் காட்டி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், மொத்த மற்றும் சில்லறை சந்தையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.


இதன்படி ஒரு கிலோகிராம் பருப்பு சுமார் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 


மூன்று வாரங்களுக்கு முன்னர் இதன் விலை சுமார் 270 ரூபாவாக இருந்தது


சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் நெத்திலி 1,300 ரூபாவைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 


முன்னர் 1,100 ரூபாவாக இருந்தது.


தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.