இஸ்ரேல் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது



 


ஈரான் தனது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும், பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது