( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அங்கு நேர்முகத்
தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர்
தலைவர்களுக்கு மேலங்கி அணிவித்து சின்னம் சூட்டும் நிகழ்வும் விளையாட்டில்
பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் மாகாண மட்ட
கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு
செய்யப்பட்ட மாணவன் தட்சணாமூர்த்தி நதுஜனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்
நடைபெற்றன.
முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப்
பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகரன்
கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அ.தேகதாஸ்
கலந்துகொண்டார்.
பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும்
கலந்து சிறப்பித்திருந்தனர்.


Post a Comment
Post a Comment