மருதமுனையில் “ரமழான் ஸ்ட்ரைவர்ஸ்” கற்கைநெறி



 


நூருல் ஹுதா உமர், ஜெஸ்மி மூஸா


மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் அனுசரணையில் அதன் மாணவர் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளில் 6, 7, 8, 9 மற்றும் 10ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ரமழான் ஸ்ட்ரைவர்ஸ்” ரமழான் பருவகால கற்கைநெறி நிறைவு நிகழ்வு சனிக்கிழமை (07) மருதமுனை அக்பர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இஸ்லாமிய பிரசார மையத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.சிபான் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய பிரசார மையத்தின் கெளரவத் தலைவரும், தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி கலந்து கொண்டார்.

மேலும் கெளரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மருதமுனை கிளை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய பிரச்சார மையத்தின் ஆலோசனை சபை, பொதுச் சபை மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கற்கை நெறியில் கலந்து கொண்ட 230 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.