(எம்.என்.எம்.அப்ராஸ்)
இலங்கை முஸ்லிங்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடி வருகிறார்கள்.
அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை வீதி ஹுதா திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (21)இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையையும்,குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஏ.எம்.கலீலுர் ரஹ்மான் நிகழ்த்தினார்.
இப்பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment