ஹோர்மூஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவுக்குச் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள இரான் தூதர் முகமது ஃபதாலியை இந்தியா அழைத்து தனது கவலையைத் தெரிவித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரான் தூதருடனான சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இரானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது


Post a Comment
Post a Comment