இருளில் காணப்படும் கல்முனை சிறுவர் பூங்கா




( எம். என். எம். அப்ராஸ் )

கல்முனை மாநகர மக்கள் மட்டும் அல்லாமல் வெளி பிரதேச மக்கள் நாளாந்தம் பொழுதை கழிக்க வரும் கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கல்முனை சிறுவர் பூங்கா என அழைக்கப்படும் இடத்தில் கடந்த மூன்று நாட்களாக அங்கு உள்ள மின் குமிழ்கள் ஒளிராமல் காணப்படுவதாக தெரிய வருகிறது 


தற்போது கல்முனை பகுதியில் அதிக வெப்ப நிலை காணப்படுகிறது பொது மக்கள் தமது பொழுது

போக்கை கழிக்கும் முகமாக நாளாந்தம் கல்முனை  கடற்கரை பகுதிகளில் அதிகம் வருகை தருகின்றனர் 


பகல் வேளையில் அதிக வெப்ப நிலை காரணமா மாலை வேளையில் மக்கள் கடற்கரை பகுதிகளில் அதிகம் வருகை தருகின்றனர் குறிப்பாக கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கல்முனை சிறுவர் பூங்கா பகுதிக்கு அதிகமான மக்கள் வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது


கல்முனை சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள மின் குமிழ்கள்  ஒளிரிந்து வந்த நிலை யில் 

தீடிரென எவ்வித முன் அறிவித்தல் இன்றி 

மின் குமிழ்கள் ஒளிராமல் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


கல்முனை மாநகர சபையின் பராமரிப்பில் உள்ள மேற் குறித்த பூங்காவில் உள்ள மின் குமிழ்கள் ஒளிர கல்முனை மாநகர ஆணையாளர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கோரிக்கை 

விடுக்கின்றனர் .


கல்முனை மாநகர சபைக்கு அதிக அளவில் வரி செலுத்தி வருகின்ற பகுதியாக கல்முனை 

விளங்குகின்றது கல்முனை மாநகர சபை முறையான சேவைகளை  வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாகும் .